34 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

அவசரகாலத்தை ரத்து செய்ய அமைச்சரவைக்கு அதிகாரம் இல்லை!

🔥 Views : 5
👁 Reading Now : 50
அவசரகாலச் சட்டத்தை ரத்து செய்யும் அதிகாரம் மாமன்னருக்கு மட்டுமே உள்ளது என்று வழக்கறிஞர் ஹனிபா மைடீன் தெரிவித்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்யும் அதிகாரம் அமைச்சரவைக்கு கிடையாது என்று அவர் தெரிவித்தார்.
நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 150(3)இன் கீழ் அவசரகாலச் சட்டத்தை ரத்து செய்யும் அதிகாரத்தை மாமன்னர் கொண்டுள்ளார். காரணம், இச்சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின் 150(2பி) பிரிவின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ரத்து நடவடிக்கை மாமன்னரின் கையெழுத்தின் வாயிலாக ஒப்புதல் வழங்கப்பட்டு அல்லது உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும். பின்னர் அது அரசாங்க பதிவேட்டில் இடம் பெற வேண்டும். அதற்கு பின்னரே அவசர காலச் சட்டம் சட்டப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டதாக பொருள்படும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles