27.9 C
Kuala Lumpur
Monday, June 29, 2026

Vetri

முகக்கவசம் அணியாத தாஜூடீனுக்கு மீண்டும் அபராதம்!

🔥 Views : 7
👁 Reading Now : 36

நாடாளுமன்ற பிரதான வளாகத்தில் முகக்கவசம் அணியாமல் காட்சியளிக்கும் பாசிர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ தாஜுடீன் அப்துல் ரஹ்மானுக்கு மீண்டும்
அபராதம் விதிக்கப்பட உள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் முகக்கவசம் அணியாமல் ஒரு பெண்மணியுடன் இவர் பேசிக்கொண்டிருக்கும் காட்சி வெளிவந்துள்ளது.
முகக்கவசம் அணிய தவறிய இவருக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது.
இரண்டு எம்ஆர்டி ரயில்கள் மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் கூட்டத்தில் இவர் முகக் கவசம் அணியாமல் இருந்ததால் 1,500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. இப்போது இரண்டாவது முறையாக இவருக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles