
தங்களது கோரிக்கைகள் நிறைவேற்ற கோரி ஒப்பந்த மருத்துவர்கள் நாடு தழுவிய அளவில் நேற்று முன்தினம் அமைதி மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விடுக்கப்பட்ட மிரட்டல்களை மீறி ஒப்பந்த மருத்துவர்கள் துணிச்சலாக இந்த மறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மறியலில் ஈடுபட்ட ஒப்பந்த மருத்துவர்களுக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று கோலசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான டாக்டர் ஸூல்கிப்லி வலியுறுத்தினார்.
இவரின் கேள்விக்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபா ஒப்பந்த மருத்துவருக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று உறுதியளித்தார்.
இவர்கள் இவ்வாறு செய்வதற்கே உரிமை இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
