
பேரா பாரிட் புந்தார் டென்னிஸ் டவுன் தோட்ட அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்துக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
அந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தமது கோலக்குராவ் தொகுதி சட்டமன்றத்தின் சார்பில் 10 ஆயிரம் வெள்ளி மானியம் வழங்கப்படுமென அதன் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ அப்துல் யுனோஸ் ஜம்ஹாரி கூறினார்.
ஆலயத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சீரமைப்பதற்கும்,மின்சாரம்,தண்ணீர் கட்டணங்கள்,உட்பட மேலும் சில அடிப்படைப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண மானியத்தை ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்தார்.
மேலும் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 100 குடும்பங்களுக்கு உணவுக் கூடைகளை வழங்கப் படும்.
உதவிகள் வழங்க முன் வந்திருக்கும் சட்டமன்ற உறுப்பினருக்கு ஆலயமங மற்றும் டென்னிஸ் டவுன் தோட்ட மக்களின் சார்பாக ஆலயத் தலைவர் லோகேஸ்வரன் நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.



