27.9 C
Kuala Lumpur
Thursday, July 23, 2026

Vetri

பாலர் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் 486 பேருக்கு 8 மாதங்களாக சம்பளம் இல்லை

🔥 Views : 18
👁 Reading Now : 60

பாலர் பள்ளிகளில் பணிபுரியும் 294 உதவியாளர்களுக்கும் 192 ஆசிரியர்களுக்கும் கடந்த 8 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று மலேசிய முன்னேற்றக் கட்சி பேராக் மாநில பொறுப்பாளர் நாகேஷ் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாடு தழுவிய நிலையில் ‘சைல்ட்’ அமைப்பின் சார்பில் 68 பாலர் பள்ளிகள், தெய்வீக வாழ்க்கைச் சங்கத்தின் 16 பாலர் பள்ளிகள், மலேசிய இந்து சங்கம் சார்பில் 17 பாலர் பள்ளிகள், ‘பெர்சத்துவான் குரு-குரு தடிக்கா சார்பில் 84 பாலர் பள்ளிகள், பெர்துபோஹான் பூசாட் பெம்பாங்குனான் கானாக்-கானாக் செமர்லாங் சார்பில் 46 பாலர் பள்ளிகள் செயல்படுகின்றன.
இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் மங உதவியாளர்களுக்கு கடந்த எட்டு மாதங்களாக வழங்கப்படவில்லை. மித்ராவின் அலட்சியத்தாலும் மஇகா-வின் பாராமுகத்தாலும் ஒற்றுமை அமைச்சர் டத்தோ ஹலிமாவின் புக்கணிப்பாலும்தான் இந்த நிலை எழுந்துள்ளது.
இந்தப் பாலர்ப் பள்ளிகளில் பணியாற்றிவரும் அனைவரும் பி-40 தரப்பைச் சேர்த்தவர்கள் என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles