31.4 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

சாலை விபத்தில் பெற்றோரை இழந்த மூன்று பிள்ளைகளுக்கு உதவுவோம்!

🔥 Views : 8
👁 Reading Now : 30

சித்தியவான் ஆயர் தாவார் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் ஆர் இளங்கோ மற்றும் அவரின் மனைவி எஸ் தவச்செல்வி உயிரிழந்தனர்.
சாலை விபத்து பெற்றோரைப் பறிகொடுத்து இருக்கும் மூன்று குழந்தைகளுக்கு
உதவிகள் கிடைக்க
பேராக் மாநில சமூகநல ஆட்சிக்குழு உறுப்பினரை விரைவில் சந்திப்பேன் என்று
பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் பேராக் மாநில முன்னாள் சட்டமன்ற சபாநாயகரின் இந்திய நிலப் பிரிவு சிறப்பு அதிகாரி தினகரன் தெரிவித்தார்.
தற்போது 14வது மலேசிய மக்களவைத் கூட்டத்தொடர் காரணமாக தாம் கோலாலம்பூரில் இருப்பதாகவும்
இச்செய்தியை கேள்விப்பட்டு அதிர்ச்சியில் உறைந்த தாகவும் அவர் சொன்னார்.
இந்த விவகாரம் பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு சென்றுவிட்டதாகவும் முதல்கட்டமாக அந்த குடும்பத்திற்கு ஒரு கணிசமான தொகையை தம் நாடாளுமன்ற அலுவலகம் தயார் செய்து கொண்டிருப்பதாகவும் தினகரன் தெரிவித்தார்.
வரும் வெள்ளிக்கிழமை அந்த குடும்பத்தை நேரில் சென்று சந்திப்போம்.
தற்போது மஞ்சோங் மாவட்ட சமூக நல இலாகா அதிகாரியை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு நிலவரத்தை தாம் விளக்கியதுகவும் பெற்றோர்களை இழந்த மூன்று பிள்ளைகளின் நலன் கருதி, இனி வரக்கூடிய காலங்களில் அந்த பிள்ளைகளின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்த
சில ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் தினகரன் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles