25.3 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

ஆணவத்தில் மிதக்க வேண்டாம்!

அவசரகால உத்தரவை ரத்து செய்ததை தற்காக்கும் வகையில் பிரதமர் துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையானது அதன் ஆணவப் போக்கை காட்டுகிறது என்று அமானா கட்சியின் தேசியத் தலைவர் முகமட் சாபு சாடினார்.
அவசரகால உத்தரவை ரத்து செய்தது தொடர்பில் மாமன்னரின் அனுமதியைப் பெறவில்லை என்று இஸ்தான நெகாரா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதால் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் மற்றும் அமைச்சர்களும் உடனடியாக பதவி விலக வேண்டும்.
இருப்பினும் தாங்கள் எடுத்த முடிவை தற்காத்துக் கொண்டிருக்கும் அரசாங்கத்தின் ஆணவப் போக்கை அவர் சாடினார்.
மாட்சிமை தங்கிய மாமன்னரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு பிரதமரும் அனைத்து அமைச்சர்களும் உடனடியாக பதவி விலக வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles