29 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

கிள்ளான் பெரிய மருத்துவமனைக்கு சுகாதார அமைச்சர், சார்லஸ் சந்தியாகோ திடீர் வருகை!

🔥 Views : 4
👁 Reading Now : 61
நோய்தொற்று நோயாளிகளினால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபா மற்றும் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ ஆகியோர் நேற்று இரவே திடீர் வருகை புரிந்தனர்.
இவர்களின் திடீர் வருகையால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எங்கள் வருகையானது கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ஸூல்கர்யணனுக்கும் தெரியாது என்று சார்லஸ் சாந்தியாகோ தெரிவித்தார்.
இங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு கூடுதல் சுவாச கருவிகள், படுக்கைகள், மருத்துவ உபகரணங்கள் வழங்குவது தொடர்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
மேலும் அனைத்து நோய்களுக்கும் குறிப்பிட்ட நேரத்தில் உணவு கிடைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பல்கலைக்கழகங்களில் பயிலும் மருத்துவத் துறை மாணவர்களை இங்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யும்படி சுகாதார அமைச்சரை கேட்டுக்கொண்டதாக சார்லஸ் சந்தியாகோ குறிப்பிட்டார்.
மருத்துவர்களுக்கும் தாதியர்களுக்கும் உதவும் வகையில் மருத்துவத் துறை மாணவர்கள் பங்காற்றலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles