25.3 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

சட்டத்துறை அமைச்சர் மற்றும் சட்டத்துறை தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குணசேகரன் தீர்மானம்!

அவசரகால ரத்து செய்யப்பட்டது தொடர்பில் நாடாளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய சட்டத்துறை அமைச்சர் தக்கியூடின் மற்றும் சட்டத் துறைத் தலைவர் இட்ருஸ் ஹருண் மீது நடவடிக்கை எடுக்க கோரி முன்னாள் மனிதவள அமைச்சர் எம். குலசேகரன் இன்று தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளார்.
நாடாளுமன்ற செயளாருக்கு அனுப்பி வைத்துள்ள தீர்மானத்தில் எம் குலசேகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவசர கால உத்தரவு ரத்து செய்யப்பட்டது தொடர்பில் மாட்சிமை தங்கிய மாமன்னர் அனுமதியை பெறவில்லை என்று இஸ்தான நெகாரா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதால் சட்டத்துறை அமைச்சர் தக்கியூடின் மற்றும் சட்டத் துறைத் தலைவர் இட்ருஸ் ஹருண் ஆகியோர் நாடாளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
மாமன்னரைஅவமதித்த இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென குலசேகரன் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles