
இந்தியாவில் புது டில்லி மற்றும் மும்பையில் இருக்கும் மலேசியப் பிரஜைகளை நாட்டுக்குள் கொண்டு வர சிறப்பு வாடகை விமானங்கள் பயன்படுத்தப்படும் என்று வெளியுறவு துறை அமைச்சர் டத்தோஸ்ரீ இஷாமுடின் தெரிவித்தார்.
இந்தியாவில் நோய்த்தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு இருக்கும் மலேசியப் பிரஜைகளை பத்திரமாக அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
விமானங்கள் தரை இறங்குவது மற்றும் புறப்படுவது விவகாரம் தொடர்பில் தீர்வு காணப்பட்டதும் வாடகை சிறப்பு விமானங்கள் புதுடில்லி மற்றும் மும்பைக்கு புறப்படும்.
இங்கு இருக்கும் மலேசியப் பிரஜைகள் நாட்டிற்குள் வந்தவுடன் அவர்களுக்கு நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும். மேலும் அவர்கள் தங்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தென் இந்தியாவில் இருக்கும் மலேசியர்கள் அழைத்து வரும் நடவடிக்கை இந்தத் திட்டத்தில் இல்லை.
நிலைமை இங்கு கட்டுப்பாட்டில் உள்ளது. இருப்பினும் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப் படுவார்கள் என்று அவர் சொன்னார்.
