29 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

மலேசியாவுக்கு சவுதி மன்னர் வழங்கிய மருத்துவ உபகரணங்கள்!

🔥 Views : 6
👁 Reading Now : 35

சவூதி அரேபியா
மன்னர் சல்மான் மலேசியாவுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி உதவி புரிந்துள்ளார்.
மனிதாபிமான மற்றும் நிவாரண உதவி மையத்தின் வாயிலாக மலேசியாவுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சாதனங்கள் கோலாலம்பூர்ங வந்து சேர்ந்துள்ளது.
நோய்த்தொற்றை முறியடிப்பதில் உதவும் நோக்கில் சவூதி அரேபியா இந்த உதவிப் பொருள்களை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சவூதி அரேபியா அரசாங்கம் 100 சுவாசக் கருவிகள், 150 நடமாடும் சுவாசக் கருவிகள், 319 ஆக்சிஜன் கவசங்கள், 30 சுவாச உபகரணங்கள், 15 மோனிட்டர்கள், 150 மின்சார மருத்துவ கட்டில்கள், 30 லட்சம் அறுவை சிகிச்சை முகக் கவசங்கள், 10 லஞ்சம் முகக் கவசங்கள், 5 லட்சம் மருத்துவ கையுறைகளை வழங்கி உள்ளது.
சவூதி அரேபியா வழங்குவதாக வாக்குறுதியளித்த பத்து லட்சம் தடுப்பூசிகள் மலேசிய வெளியுறவு அமைச்சிடம் ஒப்படைக்கப்படும் என்றும் சவூதி அரேபியா செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles