33.5 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

வெட்டித்தனமான வேலையில் ஈடுபட வேண்டாம்!குலசேகரன் எச்சரிக்கை

🔥 Views : 10
👁 Reading Now : 47

எனது குரலில் பேசி வெட்டித்தனமான வேலைகளில் ஈடுபடவேண்டாம் என்று முன்னாள் மனிதவள அமைச்சர் எம் குலசேகரன் கேட்டுக் கொண்டார்.
தடுப்பூசி போட்டுக்கொண்டால் இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்திய சமுதாயம் அழிந்து விடும் என்று எனது பாணியில் ஒருவர் பேசி இருக்கிறார்.
நான் சொல்லாததை சொன்னதாக கூறி அந்த காணொளியை அவர் வெளியிட்டிருக்கிறார்.
தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று நான் வலியுறுத்தி வருகிறேன்.
ஆனால் தடுப்பூசிகள் போட்டுக் கொண்டால் இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்திய சமுதாயம் அழிந்து விடும் என்று சொன்னதாக அவர் பேசுகிறார்.
இவர் மீது புகார் செய்தால் நிச்சயம் அவர் கைது செய்யப்படுவார். பின்னர்
என் கணவர் தவறு செய்துவிட்டார். அவரை மன்னித்துவிடுங்கள் என்று அவர் மனைவி மன்றாடுவார்.
மற்றவர்களின் குரலில் பேசும் திறமை இருந்தால் அதை அவர் வேறு இடத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.அதை விடுத்து வெட்டித்தனமான வேலையில் ஈடுபடக்கூடாது என்று குலசேகரன் எச்சரித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles