
வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றம் செல்வேன். முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என்று மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் குறிப்பிட்டுள்ளார்.
என்னை உட்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றம் செல்வேன் என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே நாடாளுமன்றத்தை ஒரு கைப்பாவையாக அரசாங்கம் பயன்படுத்தி வருவதை சரவா செலாங்காவ் நாடாளமன்ற உறுப்பினர் பாரு பியான் சாடினார்.
