33.5 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

மக்களின் ஆதரவை இழந்து விட்ட அமைச்சர்கள் கூண்டோடு பதவி விலக வேண்டும்

🔥 Views : 8
👁 Reading Now : 25

மக்களின் ஆதரவை இழந்துவிட்ட பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தை சேர்ந்த அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.
அவசரகால உத்தரவு ரத்து செய்யப்பட்டது தொடர்பில் மாட்சிமை தங்கிய மாமன்னரின் அனுமதியைப் பெறவில்லை என்று இஸ்தான நெகாரா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதால் இந்த அரசாங்கம் நாடாளுமன்றத்தில் பொய்யுரைத்து உள்ளது.
மேலும் மாட்சிமை தங்கிய மாமன்னரையும் இந்த அரசாங்கம் அவமதித்து உள்ளது.
மாமன்னரின் உத்தரவை டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தலைமையிலான அரசாங்கம் புறக்கணித்துள்ளது என்பது இஸ்தானா நெகாரா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவாக தெரிகிறது.
ஆகவே பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தலைமையிலான அமைச்சர்கள் அனைவரும் மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டதால் ராஜினாமா செய்ய வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles