30.6 C
Kuala Lumpur
Thursday, July 30, 2026

Vetri

சுங்கை சிப்புட் சுங்கை பெலாந்தோக் பூர்வக்குடிமக்கள் கிராமத்திற்கு சாலை மின் விளக்குகள்

🔥 Views : 26
👁 Reading Now : 61

பூர்வக்குடிமக்கள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் முயற்சியால் சுங்கை சிப்புட் ஜாலோங் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கம்போங் சுங்கை பெலாந்தோக் பூர்வக்குடிமக்கள் கிராமத்திற்கு 32 மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.
கம்போங் சுங்கை பெலாந்தோக் பூர்வக்குடிமக்கள் கிராமம் இருளில் இருப்பதால் மின்விளக்கு வேண்டும் அவர்கள் கோரிக்கையை முன்வைத்தனர்.
இந்த மின்விளக்குகள் பொருத்துவது தொடர்பில் தெனாகா நேஷனல் வாரிய உறுப்பினர் டத்தோ ரவிசந்திரனுடன் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன் பலனாக கம்போங் சுங்கை பெலாந்தோக் பூர்வக்குடிமக்கள் கிராமத்திற்கு மின்விளக்குகள் பொருத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மின்விளக்குகள் பொருத்தப்பட்டது குறித்து கம்போங் சுங்கை பெலாந்தோக் பூர்வக்குடிமக்கள் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles