32.3 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

நாளை திட்டமிட்டபடி நாடாளுமன்றம் செல்வோம் பக்காத்தான் தலைவர்கள் அறிவிப்பு

🔥 Views : 8
👁 Reading Now : 57

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டிருந்தாலும் நாளை திட்டமிட்டபடி நாடாளுமன்றத்தை நோக்கி செல்வோம் என்று பக்காத்தான் ஹரப்பான் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
பக்கத்தான் ஹரப்பான் எம்பிக்கள் நாடாளுமன்றம் செல்வதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது.
நாட்டிற்கும் மக்களுக்கும் கடமையாற்றும் வகையில் நாளை பக்காத்தான் ஹரப்பான் எம்பிக்கள் நாடாளுமன்றம் செல்கிறார்கள் என்று
கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமானா தலைவர் முகமட் சாபு மற்றும் ஜசெக தலைமை செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
நோய்த் தொற்றை காரணம் காட்டி நாடாளுமன்றத்தை பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் ஒத்திவைத்துள்ளார்.
உண்மையிலேயே 110 எம்பிக்கள் ஆதரவு பிரதமருக்கு இருக்கிறது என்றால் நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles