
நாடாளுமன்றத்திற்கு செல்ல முயன்ற எதிர்க் கட்சி எம்பிக்கள் பேரணி தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்ய 8 எம்பிக்களுக்கு போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.
நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தை நோக்கி டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் 107 எம்பிக்கள் அணிவகுத்து சென்ற போது கலகத் தடுப்பு போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இது தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்ய டாங் வாங்கி மாவட்ட போலீஸ் நிலையத்திற்கு வரும் படி எட்டு எம்பிக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் பாமி பாட்சில் தெரிவித்தார்.
