
எனக்கு இன்னும் பெரும்பான்மை இருக்கிறது. ஆகவே நான் இன்னும் பிரதமர் என்று டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் இன்று அறிவித்தார்.
வரும் செப்டம்பர் மாதத்தில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் நடைபெறும்போதே அதை எதிர்கொள்வேன் என்று அவர் என்று அறிவித்தார்.
எனக்கு வழங்கிய ஆதரவை 8 அம்னோ எம்பிக்கள் மீட்டுக் கொண்டுள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் நாடாளுமன்ற சபாநாயகர் டத்தோ அஸாஹருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.
இருப்பினும் எனக்கு இன்னும் பெரும்பான்மை இருக்கிறது என்று அவர் அறிவித்தார்.
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு வழங்கிய ஆதரவை நேற்று 12 அம்னோ எம்பிக்கள் மீட்டுக் கொண்டனர்
மேலும் எரிசக்தி இயற்கை வள அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சம்சூல் நஸ்ரா தமது அமைச்சர் பதவியும் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் பெரும்பான்மையை இழந்துள்ளது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை 11.00 மாட்சிமை தங்கிய மாமன்னரை இஸ்தானா நெகாராவில் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் சந்தித்தார்.
