34 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

இன்னும் 48 மணி நேரத்தில் கூடுதல் அமைச்சர்கள் பதவி விலகுவார்கள்

🔥 Views : 6
👁 Reading Now : 45

பெரிக்காத்தான நேஷனல் அரசாங்கத்திலிருந்து எரிசக்தி இயற்கை வள அமைச்சர் டத்தோ சம்சூல் அனுவார் நஸ்ரா நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
நான் அம்னோ கட்சிக்கு விசுவாசமாக இருப்பேன். அந்த வகையில் எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று
லெங்கோங் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
இந்நிலையில் இன்னும் 48 மணி நேரத்தில் கூடுதல் அமைச்சர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அம்னோ தலைமைச் செயலாளர் டத்தோங அமாட் மஸ்லான் தெரிவித்தார்.
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொள்கிறோம் என்று மாட்சிமை தங்கிய மாமன்னரிடம் அம்னோ எம்பிக்கள் சத்திய பிரமாணத்தை வழங்கியதை தொடர்ந்து இன்னும் கூடுதல் அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்வார்கள் என்று அவர் எச்சரித்தார்.
இன்னும் இரண்டு நாட்கள் பொறுத்திருங்கள் என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles