31.3 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம்

🔥 Views : 10
👁 Reading Now : 25

தோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தனது மூன்றாவது பதக்கத்தை வென்றுள்ளது.
எடைத்தூக்குதலில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கத்தை மீராபானு பெற்றுத்தந்தார். பின்னர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் பி.வி. சிந்து வெண்கல பதக்கம் வென்றார். இந்நிலையில் இன்று பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில்
69 கிலோ பிரிவு போட்டியில் இந்தியாவின் லோவ்லின வெண்கலப்பதக்கம் வென்றார்.
பரபரப்பான அரையிறுதி சுற்றில் துருக்கி வீராங்கனை சுர்மனேஸிடம் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் லோவ்லின வீழ்ந்தார்.
இருப்பினும் அரையிறுதி சுற்றுக்கு தேர்வு பெற்று பரபரப்பை ஏற்படுத்திய லாவ்லினாவுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles