31.3 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

முதியோர், பேறு குறைந்தவர்களுக்கு வீட்டிலேயே தடுப்பூசி! டாக்டர் குணராஜ் முயற்சி

🔥 Views : 6
👁 Reading Now : 44

நடக்கும் சக்தியை இழந்த முதியோர்கள் மற்றும் பேறு குறைந்தவர்களுக்கு வீட்டிலேயே தடுப்பூசி செலுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக செந்சோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்தார்.
கிள்ளான், செஞ்சிலுவை சங்கத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் படுக்கையில் இருக்கும் கடும் நோயாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இந்த திட்டம் அமலாக்கம் குறித்து தற்போது விவாதிக்கப்பட்டு வருகிறது.
வரும் ஆகஸ்ட் 10 அல்லது 11ஆம் தேதிகளில் இதனை நடைமுறைப்படுத்தும் சாத்தியம் உள்ளது என அவர் குறிப்பிட்டார்.
மருத்துவப் பணியாளர் கள் ஒவ்வொரு இடமாகச் சென்று தேவைப்படுவோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொள்வர்கள்.
தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இத்திட்டம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்த அவர் இதன் மூலம் பேறு குறைந்தவர்கள் மற்றும் நடக்கும் சக்தியை இழந்த முதியோர்கள் நன்மை அடைவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles