29.7 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

பேரா எப்சியின் மோசமான தோல்விகள்! டத்தோ கருத்து வேதனை

🔥 Views : 8
👁 Reading Now : 56

2021 சூப்பர் லீக் கால்பந்து ஆட்டத்தில் தொடர்ச்சியாக பல தோல்விகளை
அடைந்து வரும் பேரா எப்சியின் நிலையைக் கண்டு தாம் அதிருப்திக்
கொள்வதாக முன்னாள் பேரா கால்பந்து ஜாம்பவான் டத்தோ எம்.கருத்து
கூறினார்.
இந்த தோல்விகளிலிருந்து மீண்டு வருவதற்கு மீதமுள்ள
ஆட்டங்களில் புதிய யுக்திகளை புகுத்த பயிற்சியளிக்கும் குழுவினர்
மேற்கொள்ள வேண்டும் என்றார்..
அதன் மூலமே அணியின் தரத்தை உயர்த்த
முடியும் என சொன்னார்.
1988 – ஆண்டு லீக் ஆட்டத்தில் பேரா அணி
படுதோல்வி கண்டு,முதல் டிவிஷன் குழு பட்டியலில் கடைசிக்கு
இரண்டாவது நிலையில் இருந்தது.1989 -ஆம் ஆண்டு பேரா அணி
இரண்டாவது டிவிஷனுக்கு தள்ளப்பட்டது என்றார்.
எனது தலைமையில் 1990 ஆண்டு சிறப்பாக விளங்கிய பேரா அணி,31 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும்
பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளது வருத்தமளிக்கிறது என்றார்.
பேரா எப்சியின் இன்றைய நிலைக்கு,இன்னும் தீர்க்கப்படாத பல பிரச்சனைகள்
காரணமாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles