
செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில்
என்ன நிகழ்ந்தாலும் அதனை எதிர்க்கொள்ள தாம் தயார் என பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் கூறுகிறார்.
எனக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு உள்ளது. இதற்கு முன்பு நடந்ததுப் போன்ற நம்பிக்கைத் தீர்மானம் கொண்டு வரப்பட்டாலும்,அதற்கு நான் சிறிதும் அஞ்சப்போவதில்லை.அடுத்த மாதம் எனது நிலைப்பாடு உறுதி செய்யப்படும் என்றார்.
ஆதரவு தரமாட்டோம் என கண் முன்னே கூறும் சில தரப்பினர்,பின்னால் என்ன செய்வார்கள் என்பதும் தெரியாது.
இது அரசியல் விவகாரம்.இதற்கு நாடாளுமன்றத்தில் தான் தீர்வு காண வேண்டும் என்றால்,எந்த சூழ்நிலையிலும் அதனை எதிர்க்கொள்ள தாம் தயார் என அவர் கூறினார்.
எனக்கு பெரும்பான்மை இருப்பதை உறுதியாக நம்புகிறேன்,இதனால் எந்தவொரு அச்சமோ,கவலையோ படவில்லை என்று அவர் சொன்னார்.



