
பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தில் உயர் கல்வி அமைச்சராக இருந்த டத்தோஸ்ரீ டாக்டர் நோராய்னி இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
அம்னோ கட்சியின் முடிவுக்கு இணங்க இவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் எரிசக்தி இயற்கை வள அமைச்சர் டத்தோ முகமட் அனுவார் நஸ்ரா தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது இப்போது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கும் இரண்டாவது அமைச்சர் டாக்டர் நோராய்னி ஆவார்.



