
நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர தொழில் வணிகர்களுக்கு உதவ சிலாங்கூர் மாநில அரசாங்கம் 47 கோடியே 20 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.
கித்தா சிலாங்கூர் 2.0 உதவித்தொகை வாயிலாக மேலும் 20 கோடி வெள்ளி இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று அறிவித்தார்.
சிறு மற்றும் நடுத்தரத் தொழில் வியாபாரிகளுக்கு உதவும் வகையில் சிலாங்கூர் அட்வான்ஸ கடனுதவித் திட்டத்தை சிலாங்கூர் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.



