33.9 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

சுப்பிரமணியம் குடும்பத்துக்கு வீடு; சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி உதவி

🔥 Views : 7
👁 Reading Now : 68

மனிதர்களின் அடிப்படை தேவைகளில் குடியிருக்க ஒரு வீடும் ஒன்றாகும்.
அவ்வகையில் தங்களுக்கு சொந்த வீடொன்று தேவையென
இந்தியத் தம்பதியர் செய்துக் கொண்ட விண்ணப்பத்திற்கு ஏற்ப,பினாங்கின்
பாகான் டாலாம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி உடனடியாக அவர்களுக்கு மலிவு விலை வீடொன்றை பெற்றுத் தந்துள்ளார்.
மத்திய செபராங் பிறை
பகுதியில் அவர்களுக்கு வீடு கிடைத்துள்ளது.
இதற்கான உறுதிக் கடிதத்தை
சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி நேரடியாக சுப்பிரமணியத்திடம் ஒப்படைத்தார்.
பல தடவை மலிவு விலை வீட்டிற்கு விண்ணப்பம் செய்து,இன்று தங்களுக்கு
ஒரு சொந்த வீடு கிடைத்துள்ளது என கூறிய இவர்கள்,பினாங்கு மாநில
மக்களின் வீட்டு தேவையினை அறிந்து உதவியிருக்கும் சட்டமன்ற
உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டிக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles