
அரசியல் பாரம்பரியம் மிக்க அம்னோ இன்று இரண்டு பிரிவாக உடைந்துள்ளது.
அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி பக்கம் ஒரு அணியும் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு ஆதரவு தெரிவிக்கும் மற்றொரு அணியும் இன்று பிரிந்து கிடைக்கிறது.
துணை பிரதமராக இருக்கும் அம்னோவின் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தற்போது இரண்டுக்கும் நடுவில் சிக்கிக் கொண்டிருக்கிறார்.
டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொள்கிறோம் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்து உள்ளனர்.
அம்னோ உச்சமன்றத்தின் முடிவுக்கு எதிராக அமைச்சர்கள் இருக்கிறார்கள்.
இந்நிலையில் அம்னோவை சேர்ந்த இரு அமைச்சர்களான டத்தோ அகமட் சம்சூல் நஸ்ரா மற்றும் டத்தோஸ்ரீ டாக்டர் நோராய்னி ஆகியோர் பதவி விலகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.
பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு 31 தேசிய முன்னணி எம்பிக்கள் ஆதரவு இருப்பதாக டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று அறிவித்தார.
ஆனால் இவர் அறிவித்த அந்த 31 எம்பிக்கள் ஆதரவு உறுதியாக இருக்கிறதா என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது.
தஞ்சோங் காராங் நாடாளமன்ற உறுப்பினர் நோர் ஓமார் மற்றும் பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் அஜிஸ் ஆகியோர் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



