30.9 C
Kuala Lumpur
Wednesday, July 1, 2026

Vetri

முடிதிருத்தும்,கார் கழுவும் கடைகளை திறக்க அனுமதியுங்கள்

🔥 Views : 10
👁 Reading Now : 62

பல மாதங்களாக முடிதிருத்தும் மற்றும் கார் கழுவும் கடைகள் மூடிக்கிடப்பதால் அதன் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பெரும் இழப்பை எதிர்நோக்கி இருக்கிறார்கள் என்று நெகிரி செம்பிலான் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரன் தெரிவித்தார்.
இவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது.
வருமானம் இல்லாததால் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி இருக்கிறார்கள்.
எஸ்ஏபி விதிமுறைகளுக்கு உட்பட்டு முடித்திருத்தும் மற்றும் கார் கழுவும் கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும்.
கடைகளை திறக்கக் கோரி பலமுறை இவர்கள் விண்ணப்பம் செய்தும் இது வரை அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
கடைகளுக்கு வாடகை பணத்தை செலுத்த வேண்டும், தொழிலாளர்களுக்கு சம்பளம் போட வேண்டும்.
பல மாதங்களாக கடைகள் திறக்க அனுமதி இல்லாததால் இந்த தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஆயிரக்கணக்கானோர் வருமானத்தை இழந்து தவிக்கிறார்கள்.
ஆகவே இனியும் காலம் தாழ்த்தாமல் முடி திருத்தும் மற்றும் கார் கழுவும் கடைகள் திறக்க அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles