33.9 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

செராஸ் உலு புடு வட்டாரத்தில் 500 குடும்பங்களுக்கு உணவு கூடைகள்

🔥 Views : 6
👁 Reading Now : 68

நோய் தொற்றால் பெரும் பாதிப்பை எதிர் நோக்கி இருக்கும் குடும்பங்களுக்கு உதவும் வகையில் செராஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டான் கோக் வாய் உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்.
அந்தவகையில் இன்று செராஸ் உலு புடு குடியிருப்பு பகுதியில் 500 குடும்பங்களுக்கு உணவு கூடைகள் வழங்கப்பட்டன.
உலு புடு குடியிருப்பாளர் சங்கம் மற்றும் செராஸ் சமூகநல இயக்கத்தின் தலைவர் ஷாண் முத்துசாமி ஆகியோர் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.
செராஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டான் கோக் வாய், ஸ்ரீ சபா கெஅடிலான் கிளைத் தலைவர் எஸ்.டி.பாலா, சமூக சேவையாளர் செல்வராஜ் மற்றும் ஷாண் முத்துசாமி முத்துசாமி ஆகியோர் பொதுமக்களுக்கு உணவு வகைகளை எடுத்து வழங்கினர்.
நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் வருமானத்தை இழந்திருக்கிறார்கள்.
இவர்களுக்கு உதவும் வகையில் வரும் உணவு கூடைகள் வழங்கப்பட்டு வருவதாக டான் கோக் வாய் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் செராஸ் அம்னோ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles