33.9 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி மீண்டும் திருச்சி புறப்படுகிறது மலேசியன் ஏர்லைன்ஸ்

🔥 Views : 6
👁 Reading Now : 26

கிள்ளான் கேபிஎஸ் டிராவல்ஸ் மற்றும் எஸ் எம் ஆர் டிராவல்ஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் வரும் 17ஆம் தேதி மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மீண்டும் திருச்சி புறப்படுகிறது.
மலேசியாவில் சிக்கிக் கொண்டிருக்கும் இந்திய பிரஜைகள் இந்த சிறப்பு விமானத்தின் மூலம் தாயகம் திரும்பலாம் என்று கேபிஎஸ் டிராவல்ஸ் உரிமையாளர் கேபி சாமி தெரிவித்தார்.
ஆகஸ்ட் 17ஆம் தேதி
சிப்பாங் கேஎல்ஐஏ விமான நிலையத்தில் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி நோக்கி புறப்படுகிறது.


மலேசியாவில் நீண்ட நாட்களாக தங்கியிருக்கும் இந்திய பிரஜைகள் 500 வெள்ளி அபராதம் செலுத்தி தாயகம் திரும்பலாம் என்று அவர் சொன்னார்.
சிப்பாங் கேஎல்ஐஏ விமான நிலையத்தில் அந்நிய பிரஜைகளின் ஆவணங்களை பரிசீலிக்க சிறப்பு முகப்பிட சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.


கேபிஎஸ் டிராவல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து எஸ்எம்ஆர் டிராவல்ஸ் உரிமையாளர் மனோ இந்த சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்திருப்பதாக அவர் சொன்னார்.
தாயகம் திரும்பும் இந்திய பிரஜைகள் கேபி சாமி 016-2626755, நிர்வாகி கவின் 016- 2229341 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
கேபிஎஸ் நிறுவனத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 12ஆவது சிறப்பு விமானம் இதுவாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles