
பினாங்கு மாநிலத்தில் நூறு ஆண்டுகளுக்கு மேல் வரலாறு கொண்ட பினாந்தி தோட்ட ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன், பினாங்குக இந்து அறப்பணி வாரிய இயக்குநர் டத்தோ ராமச்சந்திரன் தலைமையில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
ஆலயத் தலைவர் மணிவாசகம், செயலாளர் பாலா நம்பியார் மற்றும் ஆலோசகர் டாக்டர் சுப்பிரமணியம் பிள்ளை உட்பட பொதுமக்களும் இதில் கலந்து சிறப்பித்தனர். பினாங்கு மாநிலத்தில் வரலாற்றுக்குரிய ஒரு ஆலயமாக இது விளங்கிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.




