
நாட்டை சிறந்த வழியில் நடத்துவதில் தற்போதைய அரசாங்கம் தோல்வி கண்டுவிட்டது. ஆகவே பிரதமர் பதிவிலிருந்து டான்ஸ்ரீ முகைதின் யாசின் விலக வேண்டும்.
கெஅடிலான் தேசிய ல் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாட்டை வழி நடத்த வாய்ப்பு வழங்க வேண்டும். அப்போதுதான் நாடு மீண்டும் எழுச்சி பாதைக்கு திரும்பும் என்று மூத்த அரசியல்வாதி லிம் கிட் சியாங் தெரிவித்தார்.
பக்கத்தான் அரப்பன் ஆட்சியைக் கவிழ்த்து விட்டு ஆட்சிக்கு வந்த பெரிசாத்தான் நேஷனல் நாட்டை வழி நடத்துவதில் தோழி கண்டுவிட்டது.
குறிப்பாக நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதிலும் அரசு தோல்வி கண்டிருக்கிறது.
ஆகவே நாட்டையும் மக்களையும் சிறந்த வழியில் வழி நடத்தக்கூடிய ஒரு அரசாங்கம் தேவைப்படுகிறது. டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மட்டுமே நாட்டை சிறந்த வழியில் வழிநடத்த முடியும் என அவர் சொன்னார்.



