32.5 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

காவல். ராணுவத் துறையில் இந்தியர்களின் பங்களிப்பு அவசியம்

🔥 Views : 10
👁 Reading Now : 51

மலேசிய மலேசியாவில் ராணுவம் மற்றும் போலீஸ் துறையில் இந்திய இளைஞர்கள் அதிகளவில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று ஜொகூர் கூலாய் இளைஞர் அமைப்பு தலைவரும் ஜோகூர் ஜசெக தலைவருமான படை தலைவர் சுரேந்திரன் பலராமன் கேட்டுக்கொண்டார்.
நமது இளைஞர்கள் அதிகளவில் இந்தத் துறைகளில் ஈடுபட வேண்டும். குறிப்பாக நாட்டிற்கு சேவை ஆற்றும் கடமை வீரர்களாக திகழ்வது மிக அவசியம்.

Surenthiran Balaraman


பள்ளிப் பருவத்திலேயே நமது மாணவர்களுக்கு நாட்டுப் பற்றை கற்றுக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் வருங்காலத்தில் அவர்களும் போலீஸ் மற்றும் ராணுவத்தில் பணியாற்ற ஆர்வம் பிறக்கும்.
இந்திய பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை அதிகளவில் காவல் மற்றும் ராணுவ துறையில் ஈடுபடுத்த முன்வர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்
வீட்டுக்கு ஒருவர் நாட்டின் முன்கள பணியாளராக பணியாற்றி முன் வர வேண்டும். கடமை உணர்வு மிக்க இளைஞர்கள் என்று நம் சமூதாயத்திற்கு பெயர் கிடைத்தால் அது நமக்கு கிடைக்கும் பெருமையாகும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles