
தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு பகிந்து கொள்ளும் கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதாக சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
ஆனால் நோய்த் தொற்றால் மரணமடையும் கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாக அவர் எச்சரித்தார்.
கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நாட்டில் நோய் தொற்றால் 70 கர்ப்பிணி பெண்கள் மரணம் அடைந்து இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்தாண்டிலீ இதே காலகட்டத்தில் எந்த ஒரு கர்ப்பிணி பெண்ணும் மரணம் அடையவில்லை. ஆனால் இப்போது இந்த எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அவர் கூறினார்.



