26.4 C
Kuala Lumpur
Friday, July 17, 2026

Vetri

நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்து! ஆனால் இறப்பு விகிதம் அதிகரித்தது

🔥 Views : 22
👁 Reading Now : 50

நாட்டில் கடந்த ஆறு மாதங்களில் பிறப்பு விகிதம் 4.4 விழுக்காடு குறைந்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டின் இதே காலக்கட்டத்தில் இந்த எண்ணிக்கை 1 லட்சத்து16,688 ஆக இருந்தது.
ஆனால் இவ்வாண்டு இதே காலகட்டத்தில் பிறப்பு 1 லட்சத்து 11,573 மாக குறைந்துள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தில் மிக அதிகமாக 20,389 குழந்தைகள் இக்காலக் கட்டத்தில் பிறந்ததை மக்கள் தொகை தரவுகள் காட்டுவதாக மலேசிய புள்ளி விபரத் துறையின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமது உஸீர் மாஹிடின் கூறினார்.
இந்த மூன்று மாதங்களில் பிறந்த குழந்தைகளில் பெண் சிசுக்களின் எண்ணிக்கையே அதிகமாகும்.
அதாவது 55,881 பெண் குழந்தைகள் பிறந்தன. ஆண் குழந்தை களின் எண்ணிக்கை 55,692 ஆகும் என்றார்.
நாட்டில் அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கச் செய்யும் என்ற எதிர்பார்ப்பை இந்த புள்ளி விபரங்கள் பொய்யாக்கி விட்டன என்றார் அவர்.
மலேசியாவில் மட்டுமின்றி அமெரிக்கா, தென் கொரியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெய்ன் ஆகிய நாடுகளிலும் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles