
பெந்தோங் நாடாளுமன்ற தொகுதியில் தடுப்பூசி போடுவதற்கு 95 ஆயிரம் பேர் தகுதி பெற்றிருக்கிறார்கள் ஆனால் இதுவரை 21,00 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது பெரும் ஏமாற்றம் அளிப்பதாக சபாய் சட்டமன்ற உறுப்பினர் ச காமாட்சி குறிப்பிட்டார்.
பிப்ரவரி மாதம் இறுதியில் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது.
ஆனால் பெந்தோங்கில் குறைந்த அளவில் மக்களுக்கு தடுப்பூசி போடப் பட்டிருக்கிறது.
பெந்தோங்கில் மொத்தம் ஏழு அரசாங்க கிளினிக் உள்ளது.
ஒரு கிளிக்கில் 200 பேருக்கு தடுப்பூசி போட்டால் ஏழு கிளிக்கில் மொத்தம் 1,400 பேருக்கு தடுப்பூசி போடலாம்.
மேலும் 68 நாட்களில் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்கலாம் என்று அவர் சொன்னார்.



