
பெரும்பான்மையை இழந்து விட்ட பிரதமர் ஒருவர் நாடாளுமன்றத்தை கலைக்கும் பரிந்துரையை நிராகரித்து புதிய பிரதமரை தேர்வு செய்யும் அதிகாரம் மாட்சிமை தங்கிய மாமன்னருக்கு இருப்பதாக சிவில் சட்ட வழக்கறிஞர் நிஸாம் பஷீர் தெரிவித்தார்.
கடந்த 2009ஆம் ஆண்டு பேரா மாநிலத்தில் ஆட்சி கவிழ்ந்தது.
அப்போது பேரா மாநில மந்திரி பெசாராக இருந்த டத்தோஸ்ரீ நிஷார் ஜமாலுடின் சட்டமன்றத்தை கலைக்கும் பாடி கேட்டுக்கொண்டார்.
ஆனால் பேரா சுல்தான் அஸ்லான் ஷா இவரின் பரிந்துரையை நிராகரித்தார்.
சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையை கொண்டிருந்ததால் அம்னோ கட்சியைச் சேர்ந்த டத்தோஸ்ரீ ஸம்ரி அப்துல் காடீரை புதிய மந்திரி பெசாராக நியமிக்கப்பட்டார்.
அந்த வகையில் தற்போது நாடாளுமன்றத்தை கலைக்காமல் புதிய பிரதமரை நியமிக்கும் அதிகாரம் மாமன்னருக்கு இருப்பதாக சட்ட வழக்கறிஞர் நிஸாம் பசீர் சுட்டிக்காட்டினார்.



