
மாநில அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சித்தால் சட்டமன்றத்தை கலைத்து விடுவேன் என்று மேன்மை தங்கிய சுல்தான் ஜொகூர் சுல்தான் இப்ராஹிம் என்று கடுமையாக எச்சரித்தார்.
நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் புதிய சட்டமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்யும் அதிகாரத்தை மாநில மக்களிடம் ஒப்படைப்பேன்.
மக்களுக்காக உண்மையாகும் நேர்மையாகவும் சேவையாற்றும் தலைவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றார் அவர்.
நோய்த்தொற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். உணவுக்காக கஷ்டப்படுகிறார்கள். பலர் வேலையை இழந்து இருக்கிறார்கள். ஆகவே மக்களுக்காக சேவையாற்றும் படி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் அவர் கேட்டுக்கொண்டார்.
இன்று ஜொகூர் மாநில சட்டமன்ற கூட்டத்தொடரை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த போது சுல்தான் ஜொகூர் சுல்தான் இப்ராஹிம் இவ்வாறு தெரிவித்தார்.



