
அரசாங்கம் நிர்ணயித்த SOP விதிமுறைகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சு எச்சரிக்கை விடுத்தது.
நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசாங்கம் பல இடங்களில் மக்கள் நடமாட்டம் உத்தரவைப் பிறப்பித்துள்ளது பொதுமக்கள் இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும் என உள்துறை அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. இதனிடையே நாளை முதல் பொதுமக்கள் மாநிலம் மற்றும் மாவட்டங்களை கடக்க அனுமதி இல்லை என்று தற்காப்பு துறை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் தெரிவித்தார்.



