
செப்டம்பர் மாதம் மீண்டும் பள்ளிகளை திறப்பதற்கு
உத்தேசித்திருக்கும் கல்வியமைச்சின் முடிவு ஏற்புடையது அல்ல என
சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.இதுவரையில் பள்ளி ஆசிரியர்கள் 30
விழுக்காட்டினர் மட்டுமே தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ள
வேளையில் மாணவர்களுக்கு இன்னும் தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்று
ஏம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் பேரா மாநில ஒருங்கிணைப்பாளர்
ஆர்.பி.ஜெயகோபாலன் தெரிவித்தார்.
நாட்டில் கோவிட் தொற்று ஆபாயக்
கட்டத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கும் வேளையில்,பள்ளி திறக்கும்
முடிவை அரசாங்கமும், கல்வியமைச்சும் மறுபரிசீலனை செய்ய
வேண்டுமென நிபோங் திபால் கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின்
மேலாளர் வாரியத் தலைவர் ஆ.சத்தியமூர்த்தி,கெடா புக்கிட் செலாரோங்
தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஏழுமலை
மற்றும் முன்னாள் தலைமையாசிரியர் த.முனியாண்டி ஆகியோர்
தெரிவித்தனர்.
பள்ளி திறக்கப்பட்டால் நம்மை நாமே விபரீதத்தை தேடிக்
கொள்ளும் நிலை உருவாகும் என குறிப்பிட்ட இவர்கள் பள்ளிகளை மீண்டும்
திறக்காமல் இருப்பதே சிறந்தது என அரசாங்கத்தை கேட்டுக் கொண்டனர்.