
நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவும் வகையில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தலைமையில் வசதி குறைந்த மக்களுக்கு தொடர்ந்து உணவு கூடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தனது தொகுதி மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றி வரும் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கடந்த வார இறுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு உணவு கூடைகளை வழங்கினார்.

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி சிறப்பு வருகை தந்து உணவு கூடைகள் வசதி குறைந்த மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
சிலாங்கூர் கேர் சேரிடேபள் லாவ் நிறுவனத்தின் உரிமையாளர் டான்ஸ்ரீ டத்தோ லிம் சூன் பெங் ஆதரவோடு வசதி குறைந்த மக்களுக்கு உணவு கூடைகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.