
இன்னும் பல அம்னோ எம்பிக்கள் ஆதரவை மீட்டுக் கொள்ளலாம் என்பதால் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் மருத்துவ விடுமுறையில் செல்வது நல்லது என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோ புவாட் ஸார்காசி தெரிவித்தார்.
தனக்குப் பெரும் பான்மை இருக்கிறது என்பது உண்மை என்றால் அவர் அடுத்த வாரத்திலேயே நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும்..
இல்லையென்றால் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்..
பின்புறக கதவுகள் மூடப்பட்டுவிட்டது. ஆகவே அவர் மருத்துவ விடுமுறையில் செல்லலாம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.