
டான்ஸ்ரீ மொகிதீன் யாசினை ஆதரித்த 23 அம்னோ எம்பிக்கள் இப்போது பெரும் நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
தேசிய முன்னணி சார்பில் மொத்தம் 42 எம்பிக்கள். இதில் அம்னோவை சேர்ந்த 38 எம்பிக்களில் 15 பேர் பிரதமருக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொண்டனர்.
துணை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமையில் 23 எம்பிக்கள் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு ஆதரவு வழங்கினர்.
அம்னோ உச்ச மன்றத்தின் முடிவை மதிக்காமல் இவர்கள் ஓரணியாக செயல்பட்டதால் இப்போது நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.
பெரும்பான்மையை இழந்து விட்டதால் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் எந்த நேரத்திலும் பதவி விலகலாம்.
டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் பக்கம் நின்ற இந்த 23 எம்பிக்கள் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அம்னோ அடிமட்ட உறுப்பினர்களின் வெறுப்புக்கு ஆளாகியிருக்கும் இவர்களின் எதிர்காலம் இனி கேள்விக்குறி தான் என்று வர்ணிக்கப்படுகிறது.
