25.3 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

பாகான் டாலாம் சட்டமன்ற சேவை மையத்தின் உதவியால் 30 பேருக்கு தகுதிக்கேற்ற வீடுகள்!

🔥 Views : 8
👁 Reading Now : 64

பாகான் டாலாம் சட்டமன்ற சேவை மையத்தின் உதவியால்,கடந்த மூன்று
ஆண்டுகளில் 30 பேருக்கு பிபிஆர் மற்றும் மலிவு விலை வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.
பினாங்கு அரசாங்கத்தின் விதிமுறைகள் பூர்த்தி
செய்வோருக்கு எந்தவொரு தடையும் இல்லாமல் வீடுகள்
வழங்கப்படுவதாக என பாகான் டாலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
சத்தீஸ் முனியாண்டி கூறினார்.
குருவிக்கு கூடு உண்டு,மனிதன் குடியிருக்க ஒரு வீடு வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில்,கடந்த 2018 -ஆம் ஆண்டு
தாம் இத்தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டப் பிறகு,தமது சட்டமன்ற சேவை மையத்தின் மூலமாக பலருக்கு வீடு
கிடைக்க உதவியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தொகுதி சட்டமன்ற
உறுப்பினர் என்ற நிலையில் உதவிகள் தேவைப்படுவோருக்கு எனது உதவியும் சேவையும் தொடரும் என்றார்.
இதில் வேண்டியவர் வேண்டாதவர்
என்ற பாகுபாடு கிடையாது.
அண்மையில் தகுதிப் பெற்றவர்களுக்கு
வீடுகளுக்கான சாவியையும்,உறுதிக் கடிதத்தையும் அவர் வழங்கினார்.
இந்த வாய்ப்பை பெற்ற பாகான் டாலாம் தொகுதி மக்கள்,வீடுகள் கிடைக்க உதவிய
சட்டமன்ற உறுப்பினருக்கும்,மாநில அரசாங்கத்திற்கும் நன்றியை
தெரிவித்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles