32.9 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

பிரதமர் வேட்பாளர் யார்? அம்னோதான் முடிவு செய்யும்! தனிநபர்கள் அல்ல

🔥 Views : 8
👁 Reading Now : 34

டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் பிரதமர் பதவியில் இருந்து விலகிய பின்னர் அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்பதை கட்சி சார்பில் அம்னோதான் முடிவு செய்யும் என்று அம்னோ உதவித் தலைவர் டத்தோ காலிட் நோர்டின் தெரிவித்தார்.
நான்தான் பிரதமர் வேட்பாளர் என்று தனி நபர்கள் யாரும் முடிவு செய்ய முடியாது.
பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் கட்சிக்கு மட்டுமே இருக்கிறது என்றார் அவர்.
நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி, துணைத்தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் உட்பட ஐந்து உயர்மட்டத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் பதவி விலகிய பின்னரே பிரதமர் பதவிக்கான வேட்பாளரை அம்னோ முடிவு செய்யும் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles