
பிரதமர்கள் பதவி விலகுவது இது ஒன்றும் புதிதல்ல என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் சுட்டிக்காட்டினார்.
நோய்த்தொற்றை அரசாங்கம் முறையாக கட்டுப்படுத்த தவறியது காரணமாக இதற்கு முன்னர் ஜி-8 நாடுகளைச் சேர்ந்த பிரதமர்கள் பதவி விலகி இருக்கிறார்கள்.
மலேசியாவில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வி கண்டிருக்கிறது.
நாட்டில் 7 மாதம் அவசரகால உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் நோய்த்தொற்றை கட்டுபடுத்த முடியவில்லை.
இப்போது மரண எண்ணிக்கை 12,000 மேல் அதிகரித்துவிட்டது.
மக்களின் நம்பிக்கையும் எம்பிக்களின் ஆதரவையும் இழந்துவிட்ட ஒருவர் பதவி விலகுவது தான் நல்லது என்றார் அவர்.
