
பினாங்கு இந்தியர் கால்பந்து சங்கம் ஆண்டுதோறும் மலேசிய இந்தியப்பெண்கள் இடையிலான கால்பந்து போட்டியை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட போட்டியில் பினாங்கைச்சேர்ந்த லேடி டைகர் காற்பந்து குழு சாம்பியன் கிண்ணத்தை வென்று வரலாறு படைத்தது.
இம்முறை மலேசிய இந்திய பெண்கள் இடையிலான மாபெரும் கால்பந்து போட்டியை நடத்துவதற்கு பினாங்கு இந்தியர் கால்பந்து பேரவை முடிவு செய்துள்ளது என்று அதன் தலைவர் ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.

இவ்வாண்டு அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த இந்திய பெண்கள் கால்பந்து குழு போட்டியில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் பினாங்கு இந்திய பெண்கள் கால்பந்து குழு அதிரடி படைக்க தீவிர பயிற்சிக்கு திரும்பியுள்ளது. இதனை முன்னிட்டு வீராங்கனைகளை தேர்வு செய்யும் பயிற்சியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது என்று ஸ்ரீசங்கரர் தெரிவித்தார்.
இந்திய பெண்கள் அதிக அளவில் கால்பந்து போட்டியில் பங்கேற்கும் வகையில் மாபெரும் போட்டியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.
