28.5 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

பினாங்கு மாநிலத்திலுள்ள 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு மாநில அரசின் 20 லட்சம் மானியம்

🔥 Views : 11
👁 Reading Now : 45

பினாங்கு மாநிலத்தில் செயல்பட்டு வரும் 28 தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக, 2021 – ஆம் ஆண்டுக்கான மாநில அரசாங்கத்தின் 20 லட்சம் வெள்ளி மானியம் வழங்கப்பட்டது. அண்மையில் அறிவிக்கப்பட்ட அந்த மாநிலத்தின் விவரப்படி தமிழ்ப் பள்ளிகளுக்கு 20 லட்சம், பாலர் பள்ளிகளுக்கு 150 ஆயிரம், தமிழ்ப்பள்ளிகளுக்கு சிறப்பு நிதியாக 150 ஆயிரம் மற்றும் பஞ்சாபி பள்ளிகளுக்கு 90 ஆயிர ம்வெள்ளி மானியமும் வழங்கப்பட்டது.
அண்மையில் கொம்தார் கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்வில், பினாங்கு மாநில முதலமைச்சர் சோவ் கோன் யோவ் அதற்கான மாதிரி காசோலைகளை 28 தமிழ்ப்பள்ளி பொறுப்பாளர்களிடம் வழங்கினார்.

பினாங்கு மாநிலத் துணை முதல்வரும், கல்விக் குழுவின் தலைவருமான பேராசிரியர் பி.இராமசாமியின் தலைமைத்துவத்தில் மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு இந்த சிறப்பு மானியங்கள் கிடைக்கப் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. மேலும் 2008 பொது தேர்தலில்அமோக வெற்றிப்,பினாங்குமாநிலத்தில் நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியை அமைத்தப் பிறகு, பேராசிரியர் பி.இராமசாமியின் மூலம் ஆண்டு தோறும் கிடைத்துவரும் இந்த மானியத்தால், இன்று பினாங்கு மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகள் அனைத்தும் புதுப்பொலிவுடன் சிறப்பாக இயங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles