
டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் இன்று அதிகாரபூர்வமாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு வழங்கிய ஆதரவை 15 அம்னோ எம்பிக்கள் மீட்டுக் கொண்டதைத் தொடர்ந்து பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் மற்றும் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் பெரும்பான்மையை இழந்தனர்.
இந்நிலையில் இன்று காலையில் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தலைமையில் சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
அதன் பின்னர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் இஸ்தானா நெகாரா நோக்கி புறப்பட்டார்.
மாட்சிமை தங்கிய மாமன்னரிடம் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை அவர் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


