
நாட்டில் ஏற்பட்டிருக்கும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மலேசிய மக்கள் கம்யூனிகேஷன் டாக்ஸி ஓட்டுனர் சங்க தலைவர் முத்து தன்னால் முடிந்த அளவுக்கு உதவிகளை வழங்கி வருகிறார்.
பல நண்பர்களிடம் உதவிகளைப் பெற்று அவர் வசதி குறைந்த மக்களுக்கு உதவி வருவது மிகவும் பாராட்டுக்குரியது.
இந்த வகையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அவர் காய்கறிகள் மற்றும் உணவு கூடைகளை வழங்கி உதவியுள்ளார்.
எங்களுடன் காயாமாஸ் கானோபி நிறுவனம்
செலாயாங் பசார் போரோங்கில் காய்கறிகளை கொண்டு வந்து வசதி குறைந்த மக்களுக்கு உதவுகிறது.
மலேசிய மக்கள் கம்யூனிகேஷன் டாக்ஸி ஓட்டுநர் சங்கத்தின் பொறுப்பாளர்கள் சூரியமூர்த்தி, நாகா, ராவ், காளிமுத்து மற்றும் கோலாலம்பூர் காளி சேர்ந்த ஆகியோர் எனக்கு பக்கபலமாக இருக்கிறார்கள்.
மேலும் கெடா சுங்கை பட்டாணியைச் சேர்ந்த டாக்டர் குணசேகரன், ஜொகூர் பாரு
வை சேர்ந்த பழனி மற்றும் கோலாலம்பூர் லெபோ அம்பாங் முத்தழகன் ஆகியோர் உதவிகளை வழங்கி கொண்டிருக்கிறார்கள் என்று முத்து தெரிவித்தார்.
இதனிடையே எங்களுடன் இணைந்து வசதி குறைந்த மக்களுக்கு பொருள் உதவிகளை வழங்க விரும்பும் சமூக இயக்கங்கள் நன்கொடையாளர்களை வரவேற்பதாக முத்து தெரிவித்தார்.
நீங்கள் கொடுக்கும் நன்கொடை மூலம் வாங்கப்படும் உணவு கூடைகள் வசதி குறைந்த மக்களுக்கு நேரடியாக வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
மக்கள் இன்னமும் உணவுக்காக கஷ்டப்படுகிறார்கள் ஆகவே நல்லுள்ளம் படைத்தவர்கள் எங்களுடன் இணைந்து உதவ முன்வரும் படி அவர் கேட்டுக்கொண்டார்.
தொடர்புக்கு 017-3026029 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
